ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்

6000 mAh ஆற்றல் கொண்ட பேட்டரியால் 60 மணி நேர அழைப்பு, 34 நாள்கள் ஸ்டான்ட்பை ஆற்றல், 115 மணி நேரம் மியூசிக், 12 மணி நேரம் கேமிங், 13 மணி நேரம் சினிமா பார்த்தல் என்று பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை ஜியோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் ஏனைய சிறப்பம்சங்கள்: தொடுதிரை: 6.52 அங்குலம் எச்டி+ (ஃபுல் வியூ ட்ராப் டிஸ்ப்ளே) இயக்கவேகம்: 3 ஜிபி சேமிப்பளவு: 32 ஜிபி (256 ஜிபி வரை உயர்த்தலாம்).செல்ஃபி காமிரா: 8 எம்பி ஆற்றல் ரியர் காமிரா: 13 எம்பி + 2 எம்பி (bokeh lens)

பிராசஸர்: ஆக்டா-கோர் இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 மின்கலம்: 6000 mAh ஃபேஸ் அன்லாக், கூகுள் அசிஸ்டெண்ட்க்கு ஷார்ட் கீ என்று பல்வேறு வசதிகளுடன் வெளியாகியுள்ள ஜியோனி மேக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999/- ஆகும்.