No full lockdown needed : முழு ஊரடங்கு தேவையில்லை !

No full lockdown needed : முழு ஊரடங்கு தேவையில்லை
முழு ஊரடங்கு தேவையில்லை

No full lockdown needed : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று 8,981 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,76,413.ஆக உள்ளது.

இன்று இந்தியாவின் ஒரு நாள் பாதிப்பு 1,41,986 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.தற்போது பெரும்பாலும் இப்போது 27 மாநிலங்களில் Omicron தொற்று பரவியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.No full lockdown needed

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மரணத்தை தவிர்க்கலாம்.

முதலில் தொற்று பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதை தடுப்பதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நமக்கு நல்ல விழிப்புணர்வு கிடைத்து விட்டது. அதனால் கொரோனா 3ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Covid Cases In India : அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு !