Omicron in Delhi: டெல்லியில் புதிதாக 4 பேருக்கு ஒமைக்ரான்

Omicron in Delhi
Omicron in Delhi

Omicron in Delhi: உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.

இந்நிலையில், டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.டெல்லியில் ஏற்கனவே 2 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் முதல்முதலில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்குள்ளான 37 வயதானவர் குணமடைந்து லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

இதன்மூலம், இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:-

டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் புதிதாக நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால், மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதில், சிகிச்சையில் இருந்த ஒருவர் உடல் நலம்தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தற்போது, டெல்லியில் 35 கொரோனா நோயாளிகள் மற்றும் 3 சந்தேகத்திற்கிடமான நபர்கள் எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: karisalankanni: முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி..!

karisalankanni: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: Kareena Kapoor, Amrita Arora : கரீனா கபூர், அம்ரிதா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு

Kareena Kapoor, Amrita Arora : பிரபல பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர்கான் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நடைபெற்ற பரிசோதனையின் முடிவுகளின்படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி இருவரும் பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கரீனாவும், அம்ரிதாவும் பங்கேற்றனர். அந்த புகைகப்படத்தை இன்ஸ்டாகிராம் சமூக வளைத்தளத்தில் கரீனா பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில், மல்லிகா அரோரா, கரீஷ்மா கபூர், கரீனா கபூரின் மேலாளர் மசாபா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் நடிகரும் இந்தி திரைப்பட இயக்குநருமான கரண் ஜோகர் வீட்டில் நடைபெற்ற விருந்திலும் இவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நடிகை அலியா பட் மற்றும் அர்ஜூன் கபூர் உள்பட இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் கரீனா கபூர், அம்ரிதா அரோரா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

பிரபல நடிகையான கரீனா கபூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்போது அமீர் கானுடன் லால் சிங் தத்தா என்ற திரைப்படத்திலும், ரன்வீர் சிங்குடன் தகத் என்ற திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: omicron: 2 டோஸ் தடுப்பூசிப் பாதுகாப்பு அளிக்காது- போரிஸ் ஜான்சன்