குருதி ஆட்டம் ஃபர்ஸ்ட் லுக் – டீசர் தேதி அறிவிப்பு!

குருதி ஆட்டம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு குருதி ஆட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 8ஆம் தேதியும், டீசர் வரும் 11ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.