புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது.இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அவற்றை வாபஸ் பெற வற்புறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.

மேலும் தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் கடந்த 27 ம் தேதி பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர்.

டெல்லியின் எல்லைப் பகுதியில் 9 மாதங்களுக்கு மேலாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது . அதில் விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,வேளாண் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நீங்கள், நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலையை மறித்த நீங்கள் நடத்தும் இந்த போராட்டம் பொதுமக்களின் இயல்பு வாழக்கையை பாதிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !