Manikka vinayagam: திரையிசை பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

Manikka vinayagam
மாணிக்க விநாயகம் காலமானார்

manikka vinayagam: திரையிசை பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்ட மாணிக்க விநாயகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 73. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர். அப்போது முதல் அவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளனர். தனித்துவமிக்க காந்தக் குரலினால் ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர். சுமார் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

நடிகர் தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமனார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பிரபல பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான பாடகர் மாணிக்க விநாயகம், ஏராளமான பக்திப் பாடல்களை பாடி இசையமைத்துள்ளார். அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Night curfew: கர்நாடகாவில் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு