தேர்தல் செயல்முறையைப் பாதுகாக்க அரசியல் விளம்பரங்கள் பகிர விதித்த தடை நீட்டிப்பு- பேஸ்புக்

அரசியல் விளம்பரங்கள் பகிர விதித்த தடையை நீட்டிக்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பொய்யான பரப்புரைகள் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்பதற்காக பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதம் தடைவிதித்திருந்தது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த விளம்பரங்களுக்கான தற்காலிக இடைநிறுத்தம் தேர்தலைப் பாதுகாப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.தற்போது, தேர்தல் முடிவுகளில் இழுபறி உள்ளதால், தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வாய்ப்புள்ளது.அதேசமயம், விரைவில் இந்தத் தடை நீக்கப்படும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.

தேர்தல் செயல்முறையைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளை தற்காலிகமாக விரிவுபடுத்துகிறோம். அமெரிக்காவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள அனைவரும் பைடன் திட்டமிடப்பட்ட வெற்றியாளர் என்று கூறி பதிவிட்டுவருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்