Crackers Burst: வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுமி உயிரிழப்பு

explosion-while-making-firecrackers-at-home-crackers-burst
வெடி விபத்தில் சிறுமி உயிரிழப்பு

Crackers Burst: ராஜாக்கமங்கலம் அருகே வீட்டில் தந்தை பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் மகள் உயிரிழந்துள்ளார். சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த போது விபத்து ஏற்பட்டதில் சிறுமி ஜீவன வர்ஷா பலியாகியுள்ளார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பட்டாசு தயாரிப்பு குடிசை தொழிலாக இருந்து வருகிறது. உரிமை பெறாத பல பட்டாசு கம்பெனிகள் வீடுகளில் பட்டாசுகளை உருவாக்கி கொடுத்து கூலி வழங்கி வருகின்றன.

இந்த முறையில் பல நேரங்களில் அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. வீடுகளில் பட்டாசுகள் உருவாக்கப்படும் போது அங்குள்ள சிறுவர், சிறுமிகளும் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகில் உள்ள ஒரு வீட்டில் தந்தை பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த விபத்தில் மகள் உயிரிழந்துள்ளார். சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதால் சிறுமி ஜீவன வர்ஷா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Tirupati: திருப்பதியில் இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி