omicron: 2 டோஸ் தடுப்பூசிப் பாதுகாப்பு அளிக்காது- போரிஸ் ஜான்சன்

omicron news latest
போரிஸ் ஜான்சன்

omicron: கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் தலைவிரித்தாடிய நிலை முடிந்து அடுத்ததாக ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உருமாறிய வகை உலகை அச்சுறுத்தி வருகிறது.

ஓமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து பிரிட்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கையில், “விரைவில் ஓமிக்ரான் பேரலை வீசும். அதை தடுப்பதற்காக ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகள் 2 டோஸ்களும் ஓமிக்ரானுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்காது.

ஆனால் 3-வதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டால் ஓமிக்ரான் பாதிப்பு குறையும் என்று அறிவியல் உலகம் கூறுகின்றது. எனவே மக்கள் அனைவருக்கும் ஒரு மாதகாலத்திற்குள் இன்னொரு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் டோஸ் போடாவிட்டால் ஓமிக்ரான் பாதித்தவர்களை மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும்.

இப்போது நாம் அவசரநிலையில் இருக்கிறோம். ஓமிக்ரானுடன் நமது போராட்டம் தொடங்கி விட்டது. இந்த நிலையில் 3வது பூஸ்டர் டோஸ் போட்டால் ஓமிக்ரானிடமிருந்து பாதுகாப்பு கிட்டும் என்று விஞ்ஞானிகள் கூறினாலும், இந்த நிலையில் ஓமிக்ரான் தீவிரமானது அல்ல என்று அவர்களால் கூற முடியவில்லை.

ஏற்கெனவே வாக்சின் போட்டுக்கொள்ளாதவர்கள் மத்தியில் ஓமிக்ரான் படுவேகமாகப் பரவும் என்று விஞ்ஞான உலகம் நம்மை எச்சரிக்கிறது. புதிய பூஸ்டர் டோஸ் போடப்பட வேண்டுமெனில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3வது பூஸ்டர் டோஸ் அடுத்த வாரத்தில் தொடங்கவிருக்கிறது. அதாவது 2வது டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அதை எடுத்துக் கொண்டு 3 மாத காலம் ஆகியிருக்க வேண்டும் அவர்களுக்குத்தான் பூஸ்டர் டோஸ்.

நாடு முழுதும் 42 ராணுவக் குழு அனுப்பப்பட்டு தடுப்பூசி பணியை விரைவில் நிறைவேற்றுவோம்” என்றர் போரிஸ் ஜான்சன். இப்போது இங்கிலாந்தில் 10 பேர் ஓமிக்ரான் வைரஸுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மரணம் எதுவுமில்லை.

3வது டோஸ் எடுத்துக் கொண்டால் 70 முதல் 75% வரை ஓமிக்ரானிடமிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என்கிறது விஞ்ஞான உலகம். ஞாயிறன்று 1239 பேருக்கு பிரிட்டனில் ஓமிக்ரான் தொற்றியிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனில் ஓமிக்ரான் கேஸ்கள் 3,000த்தைக் கடந்துள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை அதிகமிருக்குமென கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Vijayakanth: 6 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்கும் விஜயகாந்த்..