முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் காலமானார் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நன்மாறன் உடல்நலக் குறைவால் மதுரையில் இன்று காலமானார்.அவருக்கு வயது 72 .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 2001 மற்றும் 2006 தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

மதுரையில் ஐடி பார்க், சென்னை உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்டவை உருவாக பெரும் பாடுபட்டவர்.

மிகவும் எளிமையான மனிதர்.நன்மாறனுக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். நன்மாறன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.