EPFO: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைப்பு

EPFO: 2021-22 ம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50%-ல் இருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இன்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 230வது மத்திய வாரிய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1977-78 கால கட்டத்திற்கு பின் மிக குறைந்த வட்டி விகிதமாக இது பார்க்கப்படுகிறது. அப்போதைய வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்ததே மிக குறைந்த வட்டி விகிதம் ஆகும். இந்த முடிவு 5 கோடிக்கும் அதிகமான பி.எப் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக மிகவும் குறைவாக பி. எப் மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பி.எப் மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக குறைத்து முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

EPFO interest rate for 2021-22 slashed from 8.5% to 8.1%, lowest in over 4 decades

இதையும் படிங்க: Women’s World Cup : இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்