தேசிய சிறுதொழில்கள் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்..!

government job alert
SSC, UPSC, வங்கி வேலை வாய்ப்புகள்

தேசிய சிறுதொழில்கள் கழகம் சார்பில் சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம்.

மத்திய அரசு நிறுவனமான தேசிய சிறுதொழில்கள் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம் சென்னை ஈக்காட்டு தாங்கலில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கியது.

இதில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 7305375041 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அந்த மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல் விலை 105 ரூபாயை கடந்து விற்பனை