திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை

up-election-2022-voting-live-updates-up-assembly-election-phase-7-vote
வாக்குப்பதிவு தொடங்கியது

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது.

8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 8-வது இறுதிகட்ட தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

ஒரு மினி பொதுத்தேர்தல் போன்று அமைந்துவிட்ட இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக வாக்கு எண்ணிக்கையின் போக்கைக்கண்டு வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அரசியல் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் கூடி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் வெற்றி கொண்டாட்டங்களை தொடங்கி விடுவார்கள். வெற்றி பெற்ற பின்னரோ கொண்டாட்டங்களுக்கு கேட்கவே வேண்டாம்.

ஆனால் இம்முறை இந்த வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் பெரும் தடையாக அமைந்துவிட்டன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்துள்ளது.