விஜய் டிவியில் தொடர்ந்து பவித்ராவுக்கு லீட் ரோல்

விஜய் டிவியில் புதியதாக ஒளிப்பரப்பாக தொடங்கியுள்ள ’தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் மீண்டும் லீட் ரோலில் நடிக்கிறார் நடிகை பவித்ரா ஜனனி.

பவித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் கலாய்ப்பார் செம்ம ஹாலி கேரக்டர். அதுமட்டுமில்லை சின்னத்திரையில் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் கூட்டம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாடு இல்லைனா பாடிகிட்டு தூங்கிட்டுதான் இருப்பாராம் .நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார்.

புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார்.

படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்தார். அப்படியே மெல்ல மெல்ல வாய்ப்புகள் அவரைத் தேடி வர தொடங்கியது. ரியோ நடித்த சரவனன் மீனாட்சி தொடரில் பவித்ராவின் நடிப்பு பெரிதும் கவர்ந்திருந்தது.

பவித்ரா என்றாலே புடவையில் தான் அழகு என்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு ஏற்றார் போல் புதிய சீரியலிலும் புடவையிலேயே அசத்துக்கிறார் பவித்ரா.