education news : பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது

CBSE exam
CBSE மற்றும் CISCE தேர்வுகள்

education news : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகள் நடைபெற்றன.

தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.education news

மேலும் இந்த வருடம் நேரடி தேர்வுகள் இருக்கும் மற்றும் இருக்காது என்ற கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.

இதையும் படிங்க : Horoscope Today: இன்றைய ராசி பலன்

( 10,11th,12th public exam )