education news : அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

education-news-anna-university-updates
அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

education news : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகள் நடைபெற்றன.

தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 5-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 10, மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25-ல் தொடங்கி மே 2 வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 முதல் 28-ம் தேதி வரை நடக்கும். சுமார் 8.36 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.education news

இதையும் படிங்க : Today petrol diesel rate : பெட்ரோல் மற்றும் டீசல் விலை

இதற்கிடையே கடந்த பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து மார்ச் 12ம் தேதி வரை ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நடந்தது. இந்த ஆன்லைன் தேர்வில் விடைத் தாள்களை தாமதமாக பதிவேற்றியதாகக் கூறி, 10ஆயிரம் மாணவர்கள் மீது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கிறது.அதாவது ஆன்லைன் தேர்வில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.இதன் காரணமாக தேர்வில் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.education news

( Anna university updates )