சஞ்சய் ராவத்தின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்

வீடுகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தின்(Housing Development Infrastructure Ltd)ப்ரோமட்டர் ராகேஷ் குமார் வதவன் மற்றும் அவருடைய மகன் சாரங் வதவன், வர்யாம் சிங் மற்றும் ஜாய் தாமஸ் மற்றும் பி.எம்.சி வங்கியின் அப்போதைய நிர்வாக மேலாளர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த வரும் செப்டம்பர் மாதம் மும்பை காவல்துறையினர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், ‘ஆதாயம் பெருவதற்காக பி.எம்.சி வங்கிக்கு 4,355 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்குத் தொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே, வர்ஷா ராவத்தே மும்பையிலுள்ள அமலாக்கத்துறையில் நேரில் ஆஜாரகவேண்டும் என்று இரண்டு முறை அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், உடல்நிலையை காரணம் காட்டி நேரில் ஆஜராகவில்லை. தற்போது, மூன்றாவது முறையாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.