TNPSC exam postponed: டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு !

question paper
வினாத்தாள் கசிந்த விவகாரம்- திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு

TNPSC exam postponed : தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகிடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.TNPSC exam postponed

வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. கடந்த இரு தினங்களில் யாரும் எதிர்பாராத உச்சத்தை எட்டியுள்ளது. மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க : chennai saravana store temporarily closed : குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் தற்காலிகமாக மூடப்பட்டது !