தமிழக மக்களே உஷார்..ஆரஞ்சு அலெர்ட் !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.