தனியார் குடிப்பகங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் தனியார் குடிப்பகங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதை கைவிட வேண்டுமென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 5198 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் 2050 மதுக்கடைகளுடன் குடிப்பகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக 2050 குடிப்பகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, அனைத்து மதுக்கடைகளிலும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய குடிப்பகங்கள் பொதுவாக ஆளுங்கட்சி புள்ளிகளால் நடத்தப்பட்டு வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியமாகும்.

இத்தகைய சூழலில் தான் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட குடிப்பகங்களை மூடி விட்டு, வேறு இடங்களில் தனியார் மூலம் குடிப்பகங்களை திறக்க அரசு திட்டமிட்டிருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் நோக்கத்துடன் இத்தகைய திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.