பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லிச்சி பழம் !

லிச்சி பிங்க் நிறமுடைய அழகான பழம்.லிச்சி பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது.லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் , இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.மேலும் இதயத்தை பாதுகாத்து இதய நோய்களை தடுக்கலாம்.

இதை சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் .கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும்.லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இதனை உட்கொண்டால் செரிமானம் சீராக நடைப்பெற்று, கோடையில் ஏற்படும் வயிறு கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.