அதிமுக உடன் இணைய தயார்: ஸ்டாலின்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், அ.தி.மு.க., அரசுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு உள்ளார்.