DMK MP NR Elangovan’s son died : திமுக எம்.பி. மகன் விபத்தில் உயிரிழப்பு

dmk-mp-nr-elangovan-son-died
திமுக எம்.பி. மகன் விபத்தில் உயிரிழப்பு

DMK MP NR Elangovan’s son died : திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோவனின் மகன் ராகேஷ் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் இளங்கோவனின் மகன் ராகேஷ் உயிரிழந்தார்.

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது.வேகமாக சென்று கார் சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதியதில் இந்த பயங்கர விபத்து நடந்தாக கூறப்படுகிறது.

இதில் அவர் மகனுடன் காரில் பயணம் செய்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.DMK MP NR Elangovan’s son died

இதையும் படிங்க : Election 2022: 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை

விபத்து அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.DMK MP NR Elangovan’s son died

( NR Elangovan’s son killed in road accident )