பாஜகவில் இணைந்தார் கு.க.செல்வம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் பரப்பாகக் காணப்படுகின்றது.

தேர்தல் ஏற்பாட்டு பணிகள் ஒருபுறம், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மறுபுறம் என வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், மாற்று கட்சியில் இருந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ளார் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்.