ரூ.2 கோடிக்கும் கீழ் கடன் பெற்றவர்களுக்கு 6 மாத வட்டிக்கான வட்டி தள்ளுபடி

இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்கியவர்கள், ஆறு மாத கால வட்டிக்கான வட்டி தொகை செலுத்துவதில் தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ரூ.2 கோடிக்கும் கீழ் கடன் பெற்ற அனைவரும் 2020ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்த வேண்டிய வட்டிக்கான வட்டி தொகையை செலுத்த வேண்டியதில்லை. இதன்மூலம் சிறு, குறு தொழில் நிறுவனம், கல்விக் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட பிரிவுகள் கீழ், இரண்டு கோடிக்கு குறைவாக கடன் பெற்றவர்கள் இச்சலுகையை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வாரக்கடன் கணக்குகளுக்கு இந்த வட்டி சலுகை பொருந்தாது எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.