The Warrior: லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படம் ஓடிடியில் வெளியீடு

Director-lingusamy-and-ram-pothineni-The-Warrior-posttheatrical-streaming-rights-bagged-by-Disney--Hotstar
தி வாரியர்’ படம் ஓடிடியில் வெளியீடு

The Warrior: லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆதியின் போஸ்டர் வெளியாகியுள்ள்ளது.

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி வருகிறார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மாதவன் – ஆர்யா நடித்த ‘வேட்டை’ படத்திற்குப் பிறகு லிங்குசாமி ‘தி வாரியர்’ மூலம் காவல்துறை கதைக்களத்தைக் கையில் எடுத்துள்ளார்.

ஏற்கனவே, இப்படத்தின் ஹீரோ ராம் பொத்தினேனியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதியின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. மிரட்டல் வில்லனாக குரு என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆதி.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தியேட்டர் வெளியீட்ட்ற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Aadhi’s Rugged Avatar From The Warrior is release in OTT

இதையும் படிங்க: IPL 2022 : ஐபிஎல் 2022ல் இருந்து குஜராத் டைட்டன்ஸ் முன்னணி வீரர் வெளியேற்றம்