நடிகர் மற்றும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார் !

இயக்குநரும், நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.

‘மாசிலாமணி’ திரைப்படத்தில் இயக்குநராக பணியாற்றியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர். இந்தப் படத்தில் நகுல் மற்றும் சுனைனா நடித்திருந்தனர். RNR மனோகர் கடைசியாக ஆர்யா நடித்த ‘டெடி’ படத்தில் சாயிஷாவின் அப்பாவாக நடித்தார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 20 நாட்களாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 8.30 மணியளவில் அவர் காலமாகியுள்ளார் .

வேதாளம், மிருதன், கைதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.