Director Bala: மனைவியைப் பிரிந்தார் இயக்குநர் பாலா

director-bala-and-muthumalar-get-divorced-after-17-years-of-togetherness
இயக்குநர் பாலா

Director Bala : பிரபல இயக்குனர் பாலா மற்றும், அவரது மனைவிக்கு பரஸ்பரம் ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலா, சேது, நந்தா, பிதாமகன் என பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலர் என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி மதுரையில் திருமணம் நடந்தது.

Director Bala: மனைவியைப் பிரிந்தார் இயக்குநர் பாலா

17 ஆண்டுகளாக தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இயக்குநர் பாலாவும், அவரது மனைவி முத்துமலரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, இருவருக்கும் பரஸ்பர ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: International flight service : மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவை