Director bagyaraj : மன்னிப்பு கேட்ட இயக்குநர் கே. பாக்யராஜ்

Director bagyaraj
மன்னிப்பு கேட்ட இயக்குநர் கே. பாக்யராஜ்

Director bagyaraj : தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் கே.பாக்கியராஜ் ஒருவர்.மிக சிறந்த படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற ஒன்றில் கலந்து கொண்ட பாக்யராஜ் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022 எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்றாலும் ஒய்வில்லாமல் நாட்டுக்காக உழைக்கிறார்.

பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. அதனால், விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. இந்தியாவுக்கு மோடி போன்ற பிரதமர்தான் தேவை. ஆனால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய எப்போதுமே சிலர் தயாராக உள்ளனர். மோடி ஜி-க்கு நான் ஓர் ஆலோசனை வழங்குகிறேன். உங்களை விமர்சிப்பவர்களை குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த கருத்துக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.மேலும் பல விதமான விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க : sensex and nifty : இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்த நிலையில், தனது கருத்துக்கு பாக்யராஜ் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “குறைப்பிரசவம் என்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. புண்படுத்தும் நோக்கில் அதனை கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.