தேவேந்திர குல வேளாளர் மசோதா தாக்கல் – மத்திய அரசு !

தமிழகத்தில் மாநில பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் மற்றும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

மேலும் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை ஏற்று, 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரிட வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.இந்த திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.