தடம் புரண்ட ரயில் !

Train accident
ஆந்திரா ஸ்ரீகாகுளத்தில் ரயில் விபத்து

கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டது. கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. ரயிலில் வந்த 1,850 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது

கண்ணூர் விரைவு வண்டி மாலை 6 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 3.30 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்திற்கு வரும்.

சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வரும் வழியில் 45 கிலோ மீட்டரில் வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்துள்ளது. இந்தக் கற்களில் ரயில் இன்ஜின் உரசியதில் எஞ்சின் மற்றும் அடுத்த இரண்டு பெட்டிகள் தடம்புரண்டது.

தடம் புரண்ட பெட்டிகளில் பயணம் செய்த 2348 பயணிகள் பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்