வங்கி திவாலான ரூ.5 லட்சம் வரை காப்பீடு !

மத்திய அரசு நேற்று வங்கிகளின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.

இதன்படி, வங்கியில் பணம் செலுத்தியவர்கள், வங்கி திவாலான 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகை பெற முடியும் என்று சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் வங்கிகளில் ஏதாவது பிரச்சினை ‍ஏற்பட்டால், கணக்குதாரர்கள் 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரை பெற காப்பீடு கடன் உத்தரவாத கழகம் மூலம் வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டி.ஐ.சி.ஜி.சி மசோதா 2021-இன் கீழ், அனைத்து முதலீட்டுகளிலும் 98.3 சதவீதம் ஈடுசெய்யப்படும் மற்றும் முதலீட்டு மதிப்பின் அடிப்படையில், வைப்பு மதிப்பில் 50.9 சதவீதம் ஈடுசெய்யப்படும். உலகளாவிய டெபாசிட் மதிப்பு அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் 80 சதவீதம் மட்டுமே என கூறப்பட்டுள்ளது.