Delhi news : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பட்ஜெட் தாக்கல் செய்தார்

delhi-news-budget-2022-2023

Delhi news : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 2022-23 நிதியாண்டுக்கான ₹ 75,800 கோடி பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும், 80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தேசிய தலைநகரில் மின்னணு நகரத்தை அமைக்க சிசோடியா சனிக்கிழமை முன்மொழிந்தார்.

2022-23 நிதியாண்டுக்கான அவரது பட்ஜெட் சமர்ப்பணத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பப்ரோலாவில் மின்னணு நகரம் வரும்.எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மூலம் 80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க டெல்லியில் உள்ள பப்ரோலாவில் எலக்ட்ரானிக் சிட்டியை அமைப்போம் என்று சிசோடியா தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

கரோனா தாக்கத்திலிருந்து டெல்லியின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது. 2011-12இல் நாட்டின் மொத்த உள்நாடு உற்பத்தியில் எங்கள் மாநிலத்தின் பங்கு 3.94 சதவிகிதமாக இருந்தது. 2021-22இல் இது 4.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.Delhi news

இதையும் படிங்க : Grow hair naturally : முடி அடர்த்தியாக வளர

டெல்லியில் கடந்த 7 ஆண்டுகளில் 1.78 லட்சத்துக்கும் மேலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 51,307 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள தனியார் துறையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( delhi budget 2022 -2023 )