இனி வீட்டுக்கே வரும் மது..குடிமகன்கள் கொண்டாட்டம் !

இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பரவுவதால் பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளது.தொற்று அதிகம் பரவும் மாநிலமாக மகாராஷ்டிரா,கர்நாடகா,டெல்லி இருந்து வருகிறது.

தற்போது டெல்லியில் மொபைல் ஆப் மற்றும் இணையதளம் மூலம் மதுபானம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

எல்-13 என்ற உரிமம் வைத்திருப்பவர்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு பானங்களை வீடுகளுக்கே சென்று விநியோம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் விடுதி, அலுவலகம், கல்வி நிறுவனங்களுக்கு மதுபானங்கள் டெலிவரி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஆப், இணையதளம் ஆகியவற்றின் மூலம் ஆர்டர் செய்தால் மட்டும் மதுபானம் விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.