பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார் !

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் சிவசங்கர்.நடன இயக்குனர் மட்டுமில்லாமல் நடிராகவும் நடித்துள்ளார்.தற்போது இவர் காலமாகியுள்ளார்.அவருக்கு வயது 72.

சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிவசங்கர் இன்று காலமானார் .அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.