7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

7th pay commission: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவிட் நெருக்கடி காலகட்டத்தில் மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால், மத்திய அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமலேயே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்தாண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இந்த நிதியாண்டின் கடைசி அமைச்சரவை கூட்டம் டில்லியில் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி 34 சதவீதமாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.9,544.50 கோடி செலவினம் ஏற்படும் எனவும், 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7th pay commission: DA for central govt employees hiked by 3% to 34%

இதையும் படிங்க: Traffic Police: டிராஃபிக் போலீஸுக்கு ஹேப்பி நியூஸ்