பொடுகை விரட்ட வேண்டுமா-இதை ட்ரை பண்ணுங்க !

மலாசெஜியா என்பது நம் தலையில் வாழும் ஒரு பூஞ்சைக் காளானைப் போன்ற ஈஸ்ட் தொற்று ஆகும். இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தி சரும சறுக்கல் வறண்டு செதில் செதிலாக உதிர்வதற்கு காரணமாகிறது.இதுவே பொடுகிற்கு வழி வகுக்கிறது.

பஞ்சில் சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் சிறிதளவு தேங்காய் எண்ணையை கலந்து இந்தக் கலவையை உச்சந்தலை முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.பிறகு 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.இதனால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

தேங்காய் எண்ணையில் சிறிது விளாம்பழம் ,பொன்னாங்கண்ணி கீரை பேஸ்ட் ஒரு ஸ்பூன்,சிறிதளவு பால் சேர்த்து மிதமாக காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும் இதை உச்சந்தலை முழுவதும் தடவி பிறகு குளித்தால் பொடுகு மற்றும் அரிப்புகள் குணமாகும்.