ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியாவிற்கு டி20 தொடரை வென்று இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. அதை தொடர்ந்து டி20 தொடரில் முதல் போட்டியை 11 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை வென்று சாதித்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது.