இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் 8 வீரர்கள் இல்லை

குருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாசிட்டிவ்வை அடுத்து அவர் வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டார், இவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்களுக்கு உடனடியாக கொரோனா சோதனை மேற்கொண்டதில் வெளியான ரிசல்ட்டில் நெகட்டிவ் என்று ஆனதையடுத்து நிம்மதியடைந்தனர்.

ஆனாலும் அதற்குள் இவர்கள் களமிறங்கி ஆடுவது சரியாகாது என்பதால் இந்த 8 வீரர்கள், ஷிகர் தவான் உட்பட இன்று களமிறங்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

இன்று 8 மணிக்கு 2வது டி20 நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. நாளை, அதாவது வியாழக்கிழமை, ஜூலை 29-ல் 3வது டி20 போட்டி நடைபெறும்.

தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இலங்கையிலிருந்து திரும்ப, குருணால் பாண்டியா தனிமைக்காலம் முடிந்து மீண்டும் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் ஆன பிறகு இந்தியா திரும்புவார்.