covid vaccine : சிறுவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி !

covid vaccine : சிறுவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி !
covid vaccine : சிறுவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி !

covid vaccine : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.மேலும் இந்த பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மத்திய மற்றும் மாநில அரசும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக செய்கின்றன.

தற்போது நம் நாட்டில் , 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி தொடங்கின.

கோவிட்-19 பொதுவாக பெரும்பாலான குழந்தைகளில் லேசானது, ஆனால் அது சில குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்.covid vaccine

கோவிட்-19 தடுப்பூசியின் 1 டோஸ் உங்கள் குழந்தை கடுமையாக நோய்வாய்ப்படாமல் நல்ல பாதுகாப்பை அளிக்கிறது. ஆனால் 2 அளவுகள் வலுவான மற்றும் நீண்ட கால பாதுகாப்பை அளிக்கிறது.குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, பள்ளிகள் உட்பட மற்றவர்களுக்கு COVID-19 பரவுவதைத் தடுக்கவும் உதவும்.

தற்போது ,15 – 18 வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளலாம். அதன்படி, ஜனவரி மாதம் 31 முதல் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணி துவங்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.