தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை. மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் இனி தடுப்பூசி போட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 97 லட்சத்து 35 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 3 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டுமே சில இடங்களில் தடுப்பூசி உள்ளது. 22 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருக்கிறது.

மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வரப்பெற்ற உடன் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

தடுப்பூசி முற்றிலுமாக இல்லாமல் இருக்கும் நிலையில் 34 மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஊசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று பல இடங்களில் ஊசி போட சென்ற பலர் திரும்பச் சென்ற நிலையில் இன்றும் 2-வது நாளாக தடுப்பூசி கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.