கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு

வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ.215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு தடுப்பூசி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ.215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

2 தடுப்பூசிகளும் தலா ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.