கோவாக்சின் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனம், பிரசேலில் உள்ள தனது கூட்டுநிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் நடத்தப்பட இருந்த கிளினிக்கல் பரிசோதனையை பிரசேில் அரசு ரத்து செய்துள்ளது.

பிரசேில் நாட்டில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.

2 கோடி கோவாக்சின் மருந்து சப்ளை செய்வது தொடர்பாக பிரேசில் நிறுவனத்துடன் 32.4 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்துடனான 32.4 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது

பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசிலின் பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேற்று திடீரென ரத்து செய்தது.

தற்போது பிரேசில் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்சின் மருந்தை கிளினிக்கல் பரிசோதனையை பிரேசில் அரசு ரத்து செய்துள்ளது.