Courtallam falls: கோவை குற்றாலத்தில், நாளை (14ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. கோவையின் முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தொடர்மழையின் காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அக்., 4 முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
தற்போது, இயல்பு நிலை திரும்பியுள்ளதால், நாளை முதல் கொரோனா நோய் தடுப்பு விதி முறைகளுக்கு உட்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். கோவை குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள், http://www.coimbatorewilderness.com என்ற இணையதளத்தில், ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: karisalankanni: முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி..!



