தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு விவகாரம் – விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதற்கு பள்ளிக் கல்வி தொடங்கி கல்லூரி வரை தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டுமா அல்லது கல்லூரி படிப்பை மட்டும் தமிழ் வழியில் முடித்து இருந்தால் போதுமா என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இளநிலை தமிழ் படித்த நபர் ஒருவர் குரூப் 1 தேர்வு எழுதியுள்ளார். அவருக்கு பணி கிடைக்கவில்லை. கல்லூரி மட்டும் தமிழில் முடித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழ்கங்கப்பட்டதால் தன்னால் வேலை பெற முடியவில்லை என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழைப் படிப்பது தமிழ்நாட்டில் அரிதாகி விட்டதால் தான் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. கல்லூரி மட்டும் தமிழில் படித்திருந்தால் போதும் என விதி இருந்தால் அது இந்த நோக்கத்தையே சீர்குலைப்பது ஆகும்.

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும். இட ஒதுக்கீடு குறித்த தெளிவான விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். அதுவரை குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளது.