Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

Corona virus : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,24,476.Corona virus

சென்னையில் 742 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 1,05,003.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,971. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 742 சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10292 என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Election: வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன்