Corona virus : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.
தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 1,15,822.தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,10,882.Corona virus
மேலும் இன்று தொற்றினால் 26 பேர் உயிரிழந்தனர். 16 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,120. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 972.
தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,51,295.ஆக உள்ளது.இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 23,144 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 32,51,295 பேர்.
இதையும் படிங்க : tn news : கோர விபத்து ..பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து !



