Corona Virus: தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவு

தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு

Corona Virus: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 913-ஐ விட குறைவாகும்.

715 நாட்களுக்கு பின் நாட்டில் நேற்று தான் தினசரி கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியிருந்தது. இதன் மூலம் தொடர்ந்து 2-வது நாளாக நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: Realme Pad Mini : ரியல்மி பேட் மினி அறிமுகம்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 280 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 184 கோடியே 87 லட்சத்து 33 ஆயிரத்து 81 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Russian Gas: ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த முடியாது – ஜெர்மனி