200 கோடி தடுப்பூசிகள் டிசம்பருக்குள் தயாரிக்கப்படும்- ஜே.பி.நட்டா

இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது இந்தாண்டு டிசம்பருக்குள் 19 நிறுவனங்களாக அதிகரிக்கும் எனவும், அதன்மூலம் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ., அலுவலகத்தை காணொலி மூலம் திறந்து வைத்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: கடந்த ஆண்டு கோவிட் பரவல் முதல் அலையின் போது நம்மிடம் கோவிட் பரிசோதனைக்கு ஒரேயொரு சோதனைக் கூடம் தான் இருந்தது.

அதில், ஒருநாளைக்கு 1,500 மாதிரிகள் மட்டுமே சோதனை செய்யும் அளவில் இருந்தது. ஆனால், இப்போது, நாடு முழுவதும் 2,500 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. தினசரி சராசரியாக 25 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கிறோம். கோவிட்டை எதிர்கொள்ள தேசம் தன்னைத் தானே தகவமைத்துக்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.