Corona 3rd wave: தமிழகத்தில் கொரோனா 3வது அலை – அமைச்சர் சுப்பரமணியன்

தினசரி கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனா பாதிப்பு

Corona 3rd wave: சென்னை சைதாப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் மட்டும் இன்னும் 5 லட்சம் பேர் தடுப்பூசியே போட்டுக்கொள்ளவில்லை என்றார்.

அதனால், அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய இவர், தமிழகம் முழுவதும் இதுவரை 86.22 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 2 டோஸ் செலுத்தியவர்கள் 58.82 விழுக்காட்டினர் என்றும் கூறினார்.

“கொரோனா 3வது அலையில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வேரியண்ட் என இரண்டு வைரஸ்களும் ஒருசேர மக்களை பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்கும்போது, அச்சம் ஏற்படுகிறது. ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு 3 முதல் நான்கு நாட்களில் நெகடிவ் வந்துவிடுகிறது. இருப்பினும், 5 நாட்கள் வரை தங்கவைத்து மீண்டும் டெஸ்ட் எடுத்து, அதில் நெகடிவ் வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இனி வரும் காலங்களில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் 5 நாட்கள் மட்டும் சிகிச்சை எடுத்தால் போதும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார். 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சுகாதாரதுதறையும், கல்வித்துறையும் இணைந்து செய்து வருகிறது.

இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் சிறுமி வாயில் விஷத்தை ஊற்றிய நபர்